Sunday, December 30, 2012

காதல் அனிமேஷன்

 Love Rose Animated Picture


வண்ண வண்ணமாய் பூக்கள்
வகை வகையாய் பூத்தாலும்
காதலுக்கு ஏனோ
கரும் சிவப்பு ரோஜாதான்
சின்ன சின்னதாய் ஆரம்பித்து
பெரிது பெரிதாய் மிளிரும்
வண்ண வண்ண நகர்வுடன்
வடிவு வடிவாய் பூ இதழ்கள்

செக்க செவேல் என
பூவரசம் இலையின் வடிவத்தோடு
பளபளத்த இதயம் பார்த்து
இதயம் இப்படிதான் இருக்குமோ
ஐயம் அன்றே எழுந்தது ..
கூரான அம்பு ஒன்று
வம்பு செய்வது போல்
ஓடி வந்து உள்  புகுந்து
வெளியே வரும்
காதல் வந்ததற்கு
இப்படி கடுமையான தாக்குதல் தேவைதானோ ..?

அக்காவும் அண்ணாவும்
அகல் விளக்கிலும்
நகல் எடுப்பது போன்று
வர்ண வர்ண பூக்களின் நடுவில்
புதைத்து வரைந்தனர் இதயத்தை ..
அர்த்தம் புரியவில்லை அன்று ..

இந்தும்  அதே நிலைமை
மாற்றம் ஒன்றுதான்
அன்று அக்கா
இன்று நான்
அன்று வர்ணத்தூரிகை
இன்று ......
இருங்கப்பா
கூகுள் இமேஜ் ல
சேர்ச் பண்ணி பார்த்திட்டு வாறன் ...

அடடா ...
இதுதான் அன்றைய காதல்
அழியாத ஓவியமாய் ஆனது
இன்றைய காதல்
அரை நிமிடம்
வலை தொடர்பு அற்று போவது போல் போச்சுது ..
காதல் சிம்போல் எல்லாம் என்றும் ஒன்றுதான்
காதல் சிம்பிளா போச்சுது இன்றுதான் ..

ரெட்டை ரோஜாக்கள் ..

 

உள்ள குளத்தில்
ஒன்றி விழுந்த
ரெட்டை ரோஜாக்கள்
நிறம் வேறு வடிவம் வேறு
உள்ளம் மட்டும் ஒன்றிவிட்ட ஒன்று ..

தெள்ளிய நீராய்
தெளிவாய் ஓடும் காதல் புனல்
மெல்லிய கரங்களால்
ஆரத்தழுவி அகத்துள் நிறைத்துகொண்டது

சீ கொஞ்சம் தள்ளியே இரேன்
மூச்சு முக்குளிக்கும்
முழுதான வேளையிலும்
உன் உரசல் இன்னும்
தீ மூட்டி கொல்லுதடா ..

மூச்சு முட்டியல்ல
மோகம் முட்டி
தேகம் இழக்க போகிறது உயிர் ..
இதுதான்
தண்ணீரிலும் தாகம் கொள்வதா ...
நம் மோகம் கண்டு
தண்ணீரும் சலனம் கொள்ளுது பார் ..

மோக குளத்தில் முக்குளித்த தருணம்
என் தேக தளத்தில் சுட்டேரிக்குது சலனம்
தாக தேசத்தில் தண்ணீர் இருந்தும் வரட்சி
போகத் தளத்தில் போஜனம் இருந்தும் பசி
காதல் நிலத்தில் விதைகள் இருந்தும் தரிசு
பூவாய் நாம் முட்டி கொண்டது போதும்
கொடியாய் நாம் பற்றி கொள்ளலாம்  வா 

Saturday, December 29, 2012

வேளை ...



வெறுமைச் சுவர்களிலெல்லாம்
மோதிக்கொள்ளும் எண்ண அலைகளில்
மிதந்து அமிழ்ந்து உயர்ந்து
உலாவிக் கொள்கிறது தனிமை ..
ஒடுக்கபட்ட மக்களின்
நசுக்கபட்ட குரலாய்
ஒவொரு தடவையும்
ஏக்கத்தின் கேவல்கள்
எட்டி பார்க்கின்றது ..

இணைய முடியா சமந்தரதுள்
இணைந்து
விட்ட இரு மன வெளிகளில்
காலம்
விதைத்து விட்ட சோக விதைகளில்
விருட்சமாய் வேர் விட்டபடி விரக்திகள் ..

கோரமாய் அதன் நகங்கள்
கொடூரமாய் தாக்கிய பொழுதெல்லாம்
ஆறென கண்ணீர்
ஆறாது போனது ..
வாவெனும் ஆசைகள்
வற்றாது இருந்தது
நீ எனும் தேவை
நீங்காது இருந்தது

உன்னோடு என் தனிமைகள்
ஒரு முறை வேண்டும்
கண்ணோடு கலக்கின்ற
கணம் கொஞ்சம் வேண்டும்
மண்ணோடு  மண்ணாகும்
மரணம் ஈயும்
மகத்தான அமைதி கொள்ள
உன் மன ஓரத்தில்
மௌனமான நிமிடங்கள் வேண்டும்

என் கண்ணோடு வழியும்
உப்பு நீர் உட்கொள்ளும்
செவ்வண்ண ரோஜாவும்
என் உள்  வண்ணம் கொண்டு
உயிர் உருகி ஒழுகுது பார் ..
என் உயிர் பருகி
உலவுவதை உவப்பாக செய்பவனே
உன் உயிர் கொண்டு உலாவும்
உன்னதமான வேளை வாய்க்காதோ ..

Thursday, December 27, 2012

நம்பிக்கை

ஓரமாய் உன் உள்ள சமவெளியில் 
உடைந்து சிதறிய 
என் காதல் முத்துக்கள் 
கோர்க்கப் படாமலே 
சிதறி கிடந்தது ..
திறந்த சிப்பியும் 
கேட்பார் அற்று 
கவிழ்ந்து கிடந்தது ...
அறுந்து தொங்கும் 
இதய வீணையின் நரம்புகளில் 
சொட்டு சொட்டாய் உதிரும் 
உதிர துகள்களுள் 
கசிந்து ஒழுகியது 
என் காதல் நிணநீர் ..
கேட்பார் அற்று கிடக்கும் 
புல்லாங்குழலின் துளைகளின் ஊடே 
அவ்வப்போது புகும் காற்றின் தீண்டலில் 
இசை உயிர் பெறுவது போல் 
அவ்வப்போது உனக்குள் உதிர்ந்த 
என் காதல் முத்துகளின் உரசலினால் 
தீ பற்றி கொள்ளும் காதல் ...
வெகு தூரம் தாண்டியும் 
உன் எண்ண  அலைகளுக்குள் 
சிக்கி தவிக்க 
என் காதல் சிப்பிகளும் 
கருக்கொண்டு அலைந்தது 
உதாசீனமாய் உமிழப்பட்ட 
உமிழ் நீரின் மோதலில் 
உடைந்த கௌரவ  காந்த புலங்கள் 
எதிரும் புதிருமாய் இன்று ...
வானவில் போல் வரும் 
உன் வர்ணமற்ற காதலுக்காய் 
என் வாழ்க்கை முழுமையும் 
இருள் மேகத்தை சுமந்து வாழ 
என் எதிர் காலம் எனக்கு அனுமதி தரவில்லை 
எட்டி நடக்கின்றேன் 
என்னுடன் கை கோர்த்து 
கூட வருபவன் 
என் காதலனாய் அல்ல 
நல்ல நண்பனாய் 
என் வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டியாய் 
விடியலை நோக்கி அழைத்து செல்வான் ..
என்ற நம்பிக்கையோடு ...நான் .

Wednesday, December 19, 2012

உலகம் முடியபோவதில்லை ..



பூமி அதிர வில்லை 
அடுத்தவர் புலன்களும் 
செயல் மறக்கவில்லை 
இருந்தும் ..
ஐம்புலனும் அடங்கி போக 
அடுத்த அடி வைக்க 
அவஸ்தைப்படும் 
அங்கஹீனம் உடையவன் போல் 
அங்கேயே துவள துடித்த கால்கள் ..

 உறை பனி தேசத்தில் 
உவப்பான ஆடை இன்றி 
உபதிரவபடும் உடலை போல் 
சில்லிட்டு சிலிர்த்து உதறியது உடல் ..
அதுகாறும் பல அவசரங்களுக்கு 
அவசியமாய் துடித்த இதயம் 
எங்கோ அடி ஆழத்தில் 
துடிபிழந்து துவளும் உணர்வு 

மனதெல்லாம் காதலை வைத்து 
அதை வெளியிட முடியாத காதலனை போல் 
திக்கி தவித்து தேடி சுழன்றது 
வரட்சின் தேசத்தை 
மொத்த குத்தகைக்கு எடுத்து 
இரக்கமற்ற மனிதர்கள் வாழும் தேசத்தில் 
மன பழக்கமற்ற அவன் ஆசைகள் 
எதிர் கால கோட்டைகள் 
ஒவொரு செங்கல்லாக 
விலை பேச பட்டுக் கொண்டிருந்தது ..

ஏன் இந்த அறிவிப்பு 
என்ன பிழை 
எங்கே தவறு 
எப்படி நடந்தது 
கல்லு விழுந்த குளம் போல் 
அந்த சொல்லு விழுந்து 
குழம்பி தவித்தது மனது ...

அதிகார வர்க்கத்தின் அலட்டல்களுக்கு தெர்யுமா 
உழைக்கும் வர்க்கத்தின் 
குடும்ப  சுவர்கள் எல்லாம் 
மாத இறுதியில் வரும் 
மடித்து வைக்கபட்ட 
சில ஆயிரங்களில் சாய்ந்து நிர்ப்பது ..

எதிர் காலம் கண் முன் 
துகில் உரிக்கபட்ட்டுவிட்டது 
எந்த கர்ணன் இன்று இருக்கின்றான் 
ஓடி வந்து உதவி செய்ய ...
மனதுள் எழுந்த மலை போன்ற கேள்விகளும் 
கரும் பூதம் என மிரட்ட 
ஓர் அடி எடுத்து வைத்தவன் 
நின்று நிதானித்து சொன்னான் 
இன்றோடு என் வேலை முடியலாம் 
உலகம் முடியபோவதில்லை ..

குளிர்



விடிந்தும் விடியாத பொழுது 
கடும் குளிருக்கு அஞ்சியோ என்னவோ 
இருளை போர்வையாக்கி 
வெளி வர தயங்கி பதுங்குகிறது 
எவளவு மன தைரியத்தையும் 
எளிதில் உடைக்க கூடிய 
எகுவைகூட வெகுவாக பாதிக்கும் 
எலும்பை உருக்கும் 
குளிர் காலை ...


எட்டி பார்த்தால்  
எவளவு சுறு சசுறுப்பு 
புலராத பொழுதுகளிலும் 
தம் கடமைகளை தேடி 
ஈசல் போல் பறக்கும் மக்கள் 
நன்கு பழுத்த பலா பழத்தை 
சாக்கு கொண்டு சுற்றியதுபோல் 
எழில் மங்கையர் தோற்றம் .
ஆளை அடிக்கும் குளிருக்குள் 
அழகு பார்க்க யாரும் தயாரில்லை ..


நம் நாட்டவர்க்கு என்றுமே ஒரு வியப்பு 
இந்நாட்டவர் எப்படி ஒன்றி அலைகின்றார் என்று 
இப்படி குளிர் எனின் ... 
அவசரத்து உதவும் கணப்பு  இணை தானே ..
அன்பில் ஒன்றலா ... அவசியத்தின் ஒன்றலா 
ஒன்றியவர் கண்டிலர் ...


கொடும் கதிர் பகலவனும் 
கொஞ்சமும் தயக்கமின்றி 
ஓடி மறைந்து கொள்ளும் 
உறை  பனிக்காலம் 
உருகும் கடும் காலம் ...
இருள்கவிந்து 
குளிர் குவிந்து 
பல்லும் கடு கிடுக்கும் 
பத்து ஆடை அணிந்திருந்தாலும் 
ஐயஹோ ... 


எனினும் அழகு ...
பூப்போல .. தேங்காய் பூப்போல 
பூலோக தேவதைகாய் 
வான் மன்னவன் உதிர்க்கும் 
வெண் மல்லி பூ போலே 
மென்மையும் சுத்தமுமான 
பனி பூக்களின் தழுவலை 
ரசிக்காதோர் யாருமல்லர் ....
வெண் பஞ்சு குவியலென 
மென் பஞ்சு இதமென 
குவிந்து கிடக்கும் பனி பூக்களை 
அள்ளி விளையாடுகையில் 
அவர்தம் ஆண்டுகளை மறப்பர் ..


ஆரம்பத்தில் உலக 
அதிசயம்போல் பார்த்தவள்தான் 
இன்றோ ... இந்த நாட்களை கடக்க 
என் பிந்த நாட்டை நாடுகின்றேன் 
வாழ்க்கை தரமென்று உயர்ந்தாலும் 
வனப்பான வாழ்க்கை எனினும் 
என் நாட்டின் 
மர  நிழல்  ஈணும் 
குளிர் தென்றல் போதுமடா ...


தேன் நிலவென்று வந்திடலாம் 
இந்நாட்டின் குளிர் தன்னில் ஒன்றிடலாம் 
பொழுது போக்கென்றால் சம்மதம்தான் 
பொழுதே இங்கென்றால் -வேண்டாமென்று 
என் புலன் ஐந்தும் கெஞ்சுமடா ..


Tuesday, December 18, 2012

ஒரு வாய்ப்பு கொடு....





அந்த மாடி பால்கனிக்கு 
அன்றுதான் வந்திருந்தாள்
 இல்லை அதற்க்கு முன் வந்திருகிறார்கள்
 இன்றுதான் தனியே ..

இரவு தன் செறிவை 
ஒவொரு பார்வையிலும் 
உணர்திகொண்டிருந்தது ...
முன்னே ஆடிய 
மகிழ மரத்தின் கிளைகளில் 
மறைவில் இருந்து 
அந்த அகால வேளையிலும் 
பாடி கொண்டிருந்தது குயில் ...
குயில் பாடுவது இன்று புதிதல்ல 
காதலால் குயில் 
கணவனை காதலனை 
நாடி பாடுவாதாக தோன்றியது அன்று 
இன்று ஏங்குவதாய் தோன்றியது ..

நிலவு நெடு நேரமாய் நகராது நின்றது 
அவள் நினைவுகளும் நகர மறுத்தது ..


எதற்காக நிலவின் காத்திருப்பு 

தன் காதலிகாகவோ ...?

நிலவே நீயும் ஒருநாள் 

எனைப்போல் நிலை குலைவாயோ ?

மணந்தவர் கைகளில் 

மழலையாக தவிப்பாயோ ...?



ஆசை அறுபது மோகம் முப்பது 
இதுதானோ ?
நம்பமறுக்கும் மனதுக்கு 
மரமாய் நீண்டு கிடக்கும் 
மன்னவனின் நடத்தை சான்று பகிர்ந்தது ...


எங்கே தவறு ...?
கை கோர்த்த நிமிடத்தில் இருந்து 
கரைந்து கிறங்கிய மனது 

கலங்கி தவிப்பது புரியாத ஜடமாய் என்று ஆனாய் நீ ...?
அள்ளி அணைத்த அத்தனை தடவையும் 
அலுக்காமல் இணைந்தவள் 
வெறும் ஆசைகளுகாய் மட்டுமல்ல 
கொண்ட அடங்காத அன்புகாகவும்தான் ...


அன்பாய் அணைத்த கைகள் 
வம்பாய் பேசிய உதடுகள் 
அரவமாய் தீண்டியதேன் ...
மரிக்க துடிக்கும் ஆசைகளுக்கு 
மரண பயத்தை கொடுத்து 
மரணத்தை தள்ளி போடுகின்றேன் ..


என்னை புரியாதவனா நீ 
என்னுள் வசிகாதவனா நீ 
என்னை சுவாசிகதவனா நீ 
என்னுள் அடங்காதவனா நீ ..
எல்லாமாய் ஆனவவன் நீ 
என்னவனே எங்கு சென்றாய் ..


தளர்ந்திடும் என் உணர்வுகளுக்கு 
உன் தழுவல்கள் வேண்டும் 
மயங்கிடும் என் மனதுக்கு 
உன் மந்தகாச புன்னகை வேண்டும் 
கசந்திடும் என் நினைவுகளை அளிக்க 
மனம் திறந்து ஒரு வாய்ப்பு கொடு 
உன் மடி சாய்ந்து ஒரு துளி நீர் சிந்த 
உரிமை கொடு ... நான் உன்னவள் அல்லவா ..?

சருகான வாழ்வு...



வெறுமை நிறைந்த 
மனச்சுவர்களில் எல்லாம் 
தன்  கொடிய நகங்களால் 
கீறிச்செல்கிறது 
உன் நினைவலைகள் ...
உதிரமாய் சிந்தும் -என் 
உணர்வுச் சிதறல்களை 
பொறுக்கி எடுத்து 
புசித்து மகிழ்கிறது என் தனிமை ....

உன்னை ,உன் நினைவுகளை சுமந்தே 
என் செறிவிழந்து சருகாய் உதிர்கிறேன் .
என்னை தாண்டி செல்லும் 
எவரும் நீயாய் இருக்க மாட்டாயா ?
தேடலில் ஆலாய் பறக்றது 
சருகாய் உதிர்ந்த மனம் ..

என்னை தீண்டும் தென்றலிலும் 
உன்னை தழுவிய விரல்களை 
தேடி அலைகிறது காதல் மனம் ...
நீ நடந்த பாதகைளில் 
சருகாய் கடந்தேன் 
வருவாய் என எண்ணி ..

என்னை கடந்து எவர் போகினும் 
உன்னை கடக்க இயலா மனது 
ஓர் சாலை ஓரத்தின் 
இரட்டை நாற்காலியில் 
ஒற்றையாய் காத்திருக்கிறது ...
ஒரு முறை 
மழையாய் என்னை அணைத்துவிடு 
என் சருகான வாழ்வும் 
உனக்காய் முடியட்டும் .

Friday, December 7, 2012

என்று வருவாய் ...






ஏக்கங்களும் எண்ணங்களும் 
 தனிமைகளை
சுகமாக சுரண்டி தின்கிறது
எட்டாத நிலவு 
எரிகின்ற நெருப்பு 
கை கொள்ளா கடல் 
கை கூடா காதல் 
அனைத்தையும் 
கட்டி அணைக்க துடிக்கும் 
எண்ண அதிர்வுகளுக்கு 
வெறும் வண்ண கனவுகள்தான் மீதம் ...

கனவுகளை விதைத்து 
கண்ணீரை அறுவடை செயும் 
எண்ண அரக்கனை 
எளிதில் கொன்றால் 
வற்றாத ஜீவ நதியாகி 
ஓடிகொண்டிருக்கும் உல்லாசமாய்  உள்ளம் ...

உனக்காக ஒரு தாஜ்மஹாலை 
உள்ளத்தில் மட்டுமே கட்ட முடிந்தது 
உலகுக்கு கொடுத்த சாஜஹான் கூட 
அதை நனையாது காக்க எந்த வழியும் செயவில்லை ...
உனக்காக நான் பிடிக்கும் 
இந்த ஒற்றை கருங் குடையின் கீழ் 
என் உலகமே உனக்காய் 
விரிந்து பரந்து காத்திருகிறது 
நிழல் கொடுக்க ..
என்று வருவாய் ...
உன் பிடிவாதங்களையும் 
வீண் பிதற்றல்களையும் 
வீணென்று தூக்கி வீசி ..?

நிலவுக்கும் குடை பிடிப்பேன் 
நீ அங்கு இருப்பாய் என்றால் 
உன் நினைக்கும் குடை பிடிப்பேன் 
என் கனவுகளில் மழை நாள் என்றால் 
கனவுகளில் நீந்தி 
கலவரம்  செய்யாது 
என் கண்களில் நீந்த வா 
காலம் எல்லாம் 
உனக்கு நான் நிழல் கொடுப்பேன் ..