Wednesday, August 29, 2012

வறட்சியின் கோலம்

 
 
 
உன் அலட்சியத்தின் கட்டவிள்ப்பில்
கர்பபிளக்கிறது நம் காதல்
கலைந்து போன கோலங்களாய்
கனவுகள் சிதறி கிடக்கின்றது ..


மூச்சிரைக்கும் வரை
முத்த வேள்வியில் புரண்ட இதழ்கள்
வறட்சியின் கோலத்தில்
வெடித்து சிதறுகிறது
பற்களின் அழுத்தத்தில் .....


இறுமாந்திருந்த இதயம்
இணையற்ற பறவையாகி
இறக்கைகள் துண்டாடபட்டு
இரத்த வெள்ளத்தில் மூச்சு திணறுகின்றது ...


எங்கிருந்தாய்
எனக்குள் வந்தாய்
என் உயிர் மீது உலாவந்தாய்
உயிரற்ற ஓவியமாய்
உன் நினைவுக் கிறுக்கல்களில்
உன்னை தேடி அலைய வைத்தாய்


தனிமை சிறையில்
தத்தளிக்கும் என் உணர்வுகள்
விடுதலைக்காய் ஏங்குகின்றது
விருப்பம் இல்லாவிடினும்
விழிப்பார்வை ஒன்றை வீசிவிடு
விடுதலை பெறும்.............

கரும்பாறை

 
 
 
 
இருளை விழுங்கி
ஒளியை உமிழ்ந்து கொண்டு
நிலவு நகர்ந்து கொண்டிருந்தது
என் நினைவும்
விருது பெறக்கூடிய நம்
காதல் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம் ....

என் மன சிறகில்
உன்னை மணாளனாய் வரித்து
பயணிக்க துடித்தேன் - நீயோ
வெட்ட வெளி தன்னில்
கரும்பாறை போல் இறுமாந்து இருக்கின்றாய் ..

நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போது நீ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்..

இன்பத்தை விரட்டி - நம்
வசந்தங்களை மிரட்டி
நீயறைந்த ஆணி - என்
தனிமைச் சுவருக்குள்
என் சிறையிருப்பை
உறுதிப்படுத்துகின்றது....

காணமல் போகும் கனாக்களை
தேடி தேடியே நான்
நடைப்பிணம் ஆகிறேன் ..

இப்போது
ரணமாகிப் போன உன்
பிரிவின் கணங்களுக்காய்..........
பிரார்த்தித்து - என்
உதடுகளும்
முடமாகிப் போகின...