Sunday, December 30, 2012

ரெட்டை ரோஜாக்கள் ..

 

உள்ள குளத்தில்
ஒன்றி விழுந்த
ரெட்டை ரோஜாக்கள்
நிறம் வேறு வடிவம் வேறு
உள்ளம் மட்டும் ஒன்றிவிட்ட ஒன்று ..

தெள்ளிய நீராய்
தெளிவாய் ஓடும் காதல் புனல்
மெல்லிய கரங்களால்
ஆரத்தழுவி அகத்துள் நிறைத்துகொண்டது

சீ கொஞ்சம் தள்ளியே இரேன்
மூச்சு முக்குளிக்கும்
முழுதான வேளையிலும்
உன் உரசல் இன்னும்
தீ மூட்டி கொல்லுதடா ..

மூச்சு முட்டியல்ல
மோகம் முட்டி
தேகம் இழக்க போகிறது உயிர் ..
இதுதான்
தண்ணீரிலும் தாகம் கொள்வதா ...
நம் மோகம் கண்டு
தண்ணீரும் சலனம் கொள்ளுது பார் ..

மோக குளத்தில் முக்குளித்த தருணம்
என் தேக தளத்தில் சுட்டேரிக்குது சலனம்
தாக தேசத்தில் தண்ணீர் இருந்தும் வரட்சி
போகத் தளத்தில் போஜனம் இருந்தும் பசி
காதல் நிலத்தில் விதைகள் இருந்தும் தரிசு
பூவாய் நாம் முட்டி கொண்டது போதும்
கொடியாய் நாம் பற்றி கொள்ளலாம்  வா 

No comments:

Post a Comment