Thursday, August 16, 2012

பண்டிகை நாள் ...



காலம் கடுகதியில்
கண நேர தயக்கமின்றி
ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
காலத்தின் ஓட்டத்திற்கும்
வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும்
வாய்க்குள் கூட
வருவதை திணித்துக்கொண்டு
காலில் ரெக்கை கட்டிய கூட்டங்களாய்
இன்று மனித இயந்திரங்கள் ..
புலர்ந்ததில் இருந்து
புணர்தல்வரை
வேகம் விவேகமற்று
போய்கொண்டேதான் இருக்கிறது ...


எஸ் எம் எஸ் உம்
இ மைலும்
இதயங்களை இணைக்கும் காலத்தில்
உறவுகளையும் இவைதான்
இணைக்கின்றது ...


முகம் பார்த்து
முகவரி சென்று
முகமன் கூறும் வழக்கமெல்லாம்
முகபுத்தகம் ... இணையதள வழியால்
இனிதாகத்தான் நடகின்றது
மாமன் மச்சான் என்று கட்டி தழுவுதலும்
மாமி மாமா என்று மரியாதையை செய்வதும்
அக்கா தங்கை என கட்டி கொள்வதும்
அரிதாக போய்விட்டது ..


ஒரு மின் அஞ்சலிலும்
எஸ் எம் எஸ் இலும்
ஹாய் ஹவ் ஆர் யு ...
கேட்பதிலும் அடங்கி போய்விட
எங்கே நம் கலாச்சாரம்
இடிவிழுந்த பனை மரமாய்
மொட்டையாய் போய்விடுமோ
என்ற அச்சம் தலை தூக்க....
கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும்
பேணி காக்க ...
பண்டிகைகள் நாம் இருப்பாதாய்
மார்தட்டி கொள்கிறது ...

வாசல் தெளித்து கோலம்
வகை வகையாய் பலகாரம்
வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன்
வேபில்லையாட்டும் மாமி
விழுந்து விழுந்து படிக்கும்
அக்கா அண்ணா தம்பி தங்கையர்
எப்போதும் அலுத்துகொள்ளும் அப்பா
அடுப்பங்கரையில் அடைந்து கொள்ளும் அம்மா
அயல்வீட்டு அருமை நபர்கள்
அனைவரும் ஒன்று கூடி
அழகாய் பொழுதை கழிக்கும்
அழகான பண்டிகை நாள்

அனைவர் முகத்திலும்
அத்தி பூத்தால் போல்
அவளவு சந்தோசம் ....
இதன் புண்ணியத்தை பெருமையை
கட்டி கொள்வது
பண்டிகையா ...?
இல்லை பண்டிகையை
விடுமுறை நாளாக்கிய
நம் பாரதத்து தலைவர்களா ...?

எது எப்படியோ
ஒன்று கூட ஒரு நாள்
உலகை ரசிக்க ஒருநாள்
தின்று கழிக்க ஒருநாள்
திகட்டும் வரை பேச ஒருநாள் ..
இந்த ஒருநாள் ..
ஒவொரு நாளும் வாராதோ
ஏக்கத்துடன் .....

No comments:

Post a Comment