Sunday, November 11, 2012

எட்டி போன இளமை காலம்

வான் பார்த்து ஏங்கி
வழி விழிபார்த்து மயங்கி
ஊண் தாண்டி உயிர் பருகி
தேன் தந்த திரவியம்
அன்று  நீ எந்தன்
தாள லயம் ....

எட்டி போன இளமை காலம்
கொட்டி சென்ற முதுமைகோலம்
கட்டிசென்றது கனமான ஒரு பிணைப்பை
எட்டி நின்றே சுகித்துவிட்டேன்
உன் இளமையின் வளங்கள்தனை
வட்ட வட்டமாய் வரிகள் பதித்த
முதுமையின் கோடுகளில்
உன் முத்தங்களின் சுவடுகள்தான் ..

இளமையில் எட்டாது போன காதல் தனை

முதுமையில் கிட்டாத இளமைதனை
என் முகத்தில் தேடும் என் விழுதே ...
உன் நரை படிந்த தாடியின்
சொரசொரப்பு சொன்னது
என் நினைவுகள் உன்னை
ஊசியாய் துளைத்த கதை
உன் வசீகரம் இழந்த உதடு சொன்னது
ஒவொரு கணமும்
என் பெயரை உதிர்த்தே உலர்ந்த கதை ..
சுருங்கி போன உன் கை தோல் சொன்னது
கருகிப்போன நம் இளமை கதை

இருந்தும் உன் இறுக்கமான பிடிப்பு சொன்னது
நெருக்கமான உன் காதல் உணர்வை
யார் சொன்னது என் காதல் செத்து விட்டதாய்
என் காதல் நம் காதலாகி
வாழ்கிறது காலம் கடந்தும்
துருவ நட்சத்திரமாய் ..

No comments:

Post a Comment